மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சூப்பர் நேச்சுரல் த்ரில்லரில் சத்யராஜ்

சூப்பர் நேச்சுரல் த்ரில்லரில் சத்யராஜ்

எஃப்.எம் ரேடியோ ஸ்டேஷனை மையமாகக்கொண்ட சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சத்யராஜ்.

ஆக்ஷன், காமெடி, குணசித்திரம் என எந்தக் கதாபாத்திரத்திலும் எளிதாக நடிக்கக்கூடியவர் சத்யராஜ். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர். தற்போது இவர் ‘கள்ளப்படம்’ இயக்குநர் வேல் இயக்கத்தில் ஒரு முழு நீள திகில் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து இயக்குநர் வேல் பேசுகையில், “பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். சத்யராஜ் சார் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவுடனே எனது பாதிக்கும் மேற்பட்ட வேலை முடிந்ததாக உணர்ந்தேன். இந்தப் கதாபாத்திரத்துக்கு அவரைவிடப் பொருத்தமான நடிகர் யாரும் இல்லை. ஒரு எஃப்.எம் ரேடியோ ஸ்டேஷனை மையமாகக்கொண்ட சூப்பர் நேச்சுரல் த்ரில்லர்தான் இந்தப் படம். ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஒரு குறிப்பிட்ட இரவில் நடக்கும் அசாதாரண சம்பவங்களே இந்தப் படத்தின் மைய கருவாகும். கதையில் தத்ரூபத்துக்காக ஒரு நிஜ எஃப்.எம் ஸ்டேஷனிலேயே இந்தப் படத்தைப் படமாக்கவுள்ளோம். இந்தப் படத்தின் கதையும் அணுகுமுறையும், நல்ல திகில் படத்தை என்றுமே கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018