மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

காலிறுதியில் இந்திய அணி!

காலிறுதியில் இந்திய அணி!

ஜூனியர் உலகக்கோப்பையில் நாளை (ஜனவரி 19) இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிகள் மோத உள்ளன.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் இந்திய அணி, ஜிம்பாவே அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் பி பிரிவில் இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று பெற்று 4 புள்ளிகளுடன் காலிறுதி வாய்ப்பினை பெற்றுள்ளது. எனவே நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் ஜிம்பாவே அணியுடன் பதற்றம் இன்றி இந்திய அணி விளையாடும்.

ஜிம்பாவே அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. நாளை அதிக புள்ளிகளுடன் வெற்றிபெறும் அணி காலிறுதி வாய்ப்பினை பெரும். எனவே இந்திய அணியை வீழ்த்த ஜிம்பாவே அணி கடுமையாக போராடும்.

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷான் போரல் காயம் காரணத்தால் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்க்கு பதிலாக ஆதித்யா தாக்ரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடைசியாக நடைபெற்ற ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்பட்டார் என்பதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018