மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

நான் மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ்ராஜ்

நான் மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ்ராஜ்

'நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல மோடிக்கு எதிரானவன்' என்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், தன்னை விட பிரதமர் மோடி சிறந்த நடிகர் என்று கிண்டலடித்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் சங்பரிவார் அமைப்புகளை பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று(ஜனவரி 18) இந்தியா டுடே சார்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிராகாஷ்ராஜ், துர்கா மட்டன் ஷாப், ஷிவா மட்டன் ஷாப் என்றால் உங்களுக்கு பிரச்னையில்லை. ஆனால் படத்திற்கு செக்ஸி துர்கா என்று பெயர் வைத்தால் குற்றமா என்று கேள்வி எழுப்பினார். எந்தப் படமும் இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, "கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவை சார்ந்த ஒருவர் என்னை இந்துக்களுக்கு எதிரானவர் என்று கூறினார். நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு தான் எதிரானவன். மேலும் மோடி அமித்ஷா இருவரும் இந்துக்களே அல்ல என்றும் கூறியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018