இந்திய ஐடி பணியாளர்களின் ஆதிக்கம்!

அமெரிக்காவின் சீட்டில் நகரில் பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களில் சுமார் 40 சதவிகிதத்தினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று ‘தி சீட்டில் டைம்ஸ்’ தினசரி பத்திரிகை அறிவித்துள்ளது.
’தி சீட்டில் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஐடி நிறுவனங்களின் புகலிடமாகத் திகழும் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களில் சுமார் 70 சதவிகிதத்தினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அதைத் தொடர்ந்து, அமேசான், போயிங், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் கூடாரமாகத் திகழும் சீட்டில் நகரத்தில் பணியாற்றும் ஐடி பணியாளர்களில் சுமார் 40 சதவிகிதத்தினர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 40 சதவிகிதத்தினர் இந்தியர்களாவர். இந்தியாவைத் தொடர்ந்து, சீட்டில் நகரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் 13.5 சதவிகிதத்தினர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.