மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

பிரதமருடன் பிரச்னையா? ஓபிஎஸ் விளக்கம்!

பிரதமருடன் பிரச்னையா? ஓபிஎஸ் விளக்கம்!

டெல்லி சென்றுள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்திக்காத நிலையில், அவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்றும் நேரம் கேட்காததாலேயே அவரை சந்திக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில், மாநிலங்களின் நிதியமைச்சர்கள் பங்கேற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று(ஜனவரி 18) நடைபெற்றது. தமிழகம் சார்பில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடத்தை மத்திய குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் இன்னும் இடம் முடிவாகவில்லை. இனியும் தாமதிக்காது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடத்தை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.

கன்னியாகுமரியில் மீன் பதப்படுத்துதல் கூடத்துடன் கூடிய துறைமுகம் அமைக்க வேண்டும்.சென்னையில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க, வெளி வட்டச்சாலை உள்பட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நதிகள் இணைப்பு குறித்து வலியுறுத்தினேன். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன். டில்லியில் மர்ம மரணம் அடைந்த மாணவர் சரத் பிரபு விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தெளிவான விபரம் கிடைக்கும். அவரது குடும்பத்தினருக்கு எவ்வாறு உதவுவது என்று முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுப்போம்" என்று தெரிவித்தார்.

மேலும், மதுரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பான கல்வெட்டு உடைக்கப்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், “ ஜெயலலிதா மரணம் அடைந்த நாள் தொடர்பாக திவாகரனின் வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாகக் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் எதுவும் கூற இயலாது” என்று பதிலளித்தார்.

ரஜினிகாந்த் , கமலஹாசன் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியினைத் தொடங்கலாம். ஆனால் அவர்கள் இருவரும் இறுதியில் மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்கள் நடந்துகொள்வதை வைத்துத்தான் மக்கள் அவர்களை கணிப்பார்கள். ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள் என்று தெரிவித்த பன்னீர்செல்வம், “ ரஜினி- கமல் உடன் கூட்டணி வைக்கப்படுமா என்பதகற்கு இப்போது பதில் கூற இயலாது. தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அப்போதைய ‘கிளைமெட்’ எப்படி இருக்குமோ அதற்கு ஏற்ப முடிவு செய்வோம்” என்று விளக்கமளித்தார்.

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்காததால் அவரை இம்முறை சந்திக்கப்போவதில்லை என்று தெரிவித்த அவர், “ மோடியுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை; இனி வரப்போவதும் இல்லை” என்று உறுதிப்படத் தெரிவித்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018