மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ரயில்வே துறை சேவை; வணிகமல்ல!

ரயில்வே துறை சேவை; வணிகமல்ல!

ரயில்களில் கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பான நிதி ஆயோக் ஆலோசகர் ரவீந்திர கோயல் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். ரயில்வே துறை சேவை நோக்கத்துடன் செயல்பட வேண்டுமே தவிர, லாபம் தரும் வணிகமாக இருக்கக்கூடாது என்று, அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் கட்டண வருமானத்தைப் பெருக்கும் நோக்கத்துடன், முதல் 50% பயணச்சீட்டுகள் விற்பனையான பின்னர் மீதமிருக்கும் 50% சீட்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் உண்டானதையடுத்து, கட்டண உயர்வில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பில் ஆலோசகர் ரவீந்தர் கோயல் மற்றும் சில உயர் அதிகாரிகள் அடங்கிய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

படுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் கீழ் படுக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பண்டிகை காலத்தில் அதிக கட்டணம் நிர்ணயிப்பது, நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ரயில் நிற்கும் ஊர்களுக்கு பயணச்சீட்டு கட்டணத்தில் தள்ளுபடி செய்வது உட்பட பல அம்சங்களை கோயல் குழு பரிந்துரை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ரயில்களில் கட்டணத்தை உயர்த்தும் வழிகளைக் கண்டறிவதால் பயணிகளுக்கு பாதிப்பு மட்டுமே ஏற்படும் என்று தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். முழுக்க முழுக்க வணிக நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார்.

“தொடர்வண்டிகளில் கீழ் படுக்கை என்பது ஆடம்பரம் அல்ல; அது அடிப்படை வசதியாகும். மூத்த குடிமக்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு கீழ் படுக்கை தான் மிகவும் வசதியாகும். அவ்வாறு இருக்கும்போது கீழ் படுக்கை வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற நடவடிக்கை ஆகும். தெற்கு தொடர்வண்டித் துறையின் எல்லையில் இயங்கும் அனைத்து தொடர்வண்டிகளும், அனைத்து நாட்களிலும் முழு அளவிலான பயணிகளுடன் தான் இயங்குகின்றன. இதனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்துத் தொடர்வண்டிகளிலும் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படுமே தவிர குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

இதற்கெல்லாம் மேலாக, தொடர்வண்டிகளை இயக்குவது என்பது சேவையாக பார்க்கப்பட வேண்டுமே தவிர, லாபம் தரும் வணிகமாக பார்க்கப்படக்கூடாது. சரக்குக் கட்டணத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் உயர்த்தி, பயணிகள் கட்டணத்தை குறைவாக வைத்திருப்பது தான் தொடர்வண்டித் துறையின் மக்கள் நலக் கொள்கையாக இருக்க வேண்டும். தொடர்வண்டித்துறை அமைச்சராக லாலுவும், இணை அமைச்சராக பாட்டாளி மக்கள் கட்சியின் வேலுவும் இருந்தபோது இத்தகைய கொள்கை கடைபிடிக்கப்பட்டதால் தான் ஐந்தாண்டுகளில் ஒருமுறை கூட தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படவில்லை; மாறாக தொடர்வண்டிக் கட்டணங்கள் இருமுறை 7% வரை குறைக்கப்பட்டன. அவர்கள் காலத்தில் தான் அதிக எண்ணிக்கையில் தொடர்வண்டித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இத்தனைக்குப் பிறகும் தொடர்வண்டித்துறை லாபத்தில் செயல்பட்டது; அதன் கையிருப்புத் தொகையும் அதிகரித்தது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018