மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

பியூட்டி ப்ரியா: உற்சாக அழகுக்கு ஓட்ஸ்!

பியூட்டி ப்ரியா: உற்சாக அழகுக்கு ஓட்ஸ்!

ஒரு டேபிள்ஸ்பூன் வேகவைத்த ஓட்ஸ், அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா, மூன்று டீஸ்பூன் தண்ணீர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பிறகு, இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு, சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். பிறகு, லைட் டோனர் பயன்படுத்தவும். இந்த அல்ட்ரா மாய்ஸ்சரைசரிங் மாஸ்க்கை வாரத்துக்கு என்ற முறையில் பயன்படுத்திவந்தால் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

ஒரு டீஸ்பூன் வேகவைத்த ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மாஸ்க்கை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இதை வாரத்துக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி விடும்.

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.

ஒரு டீஸ்பூன் வேகவைத்த ஓட்ஸ், இரண்டு டீஸ்பூன் யோகார்ட் இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவி காய்ந்ததும் 10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை வாரத்துக்கு ஒருமுறை என்று பயன்படுத்திவந்தால் மென்மையான மிருதுவான சருமம் கிடைக்கும்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018