மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ஹெல்மெட் அணியாமல் அபராதம் கட்டிய எம்.பி.!

ஹெல்மெட் அணியாமல் அபராதம் கட்டிய எம்.பி.!

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக மத்தியபிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அபராதம் செலுத்தியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தில் 108 அடி ஆதி சங்கராச்சாரியா சிலை வடிவமைப்பதற்காக 'ஏகதம் யாத்ரா' என்ற பெயரில் பலர் மாநிலம் முழுவதும் சென்று உலோகங்கள் சேகரித்து வருகின்றனர்.

கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற பேரணியில் போபால் நாடாளுமன்ற உறுப்பினரான அலோக் சஞ்சாரும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை இயக்கியுள்ளார். இதனைப் படம்பிடித்த ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து அலோக் சஞ்சாரை தொடர்பு கொண்டு காவல்துறையினர் விசாரித்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்துக்குச் சென்ற அலோக் சஞ்சார் 250 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.

‘போக்குவரத்து விதியை மீறி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். இனி இது போன்று நடைபெறாது” என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

இதுதவிர இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்.பி,” யாரோ புகார் அளித்ததாகப் போக்குவரத்து போலீஸ் அதிகாரி மகேந்திர ஜெயின் நேற்று தனக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பைத் தொடர்ந்து உடனே சென்று அபராதம் செலுத்தினேன்.

இனி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தையும் சீட் பெல்ட் அணியாமல் காரையும் இயக்கமாட்டேன். போக்குவரத்து விதிகளைக் கட்டாயமாக கடைப் பிடிப்பேன் “ என்று கூறியுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018