ரஜினி Vs நித்யானந்தா :அப்டேட் குமாரு

இப்பல்லாம் படம் ஜெயிக்குதோ இல்லையோ, வெளிவருமோ வராதோ ஒரு வாரம் தாண்டி தியேட்டர்ல இருக்குதோ இல்லையோ பட்ஜெட்டுல சக்சஸ் மீட்டுக்கும் ஒரு அமௌண்ட்ட சேர்க்கனும் போல. நாம போற தியேட்டர்லலாம் ஈ ஆடுது. பேஸ் புக்ல ஸ்டேட்டஸ் போடுற அளவுக்கு கூட வொர்த்தா இல்ல. ஆனா யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறங்குற மாதிரி எல்லா மீடியாவையும் கூட்டி ச்க்சஸ் மீட் நடத்தி நியூஸ் ஆக்கிடுறாங்க. முன்னல்லாம் 100 நாள், 200 நாள், ஒரு வருசம் ஓடுனா இந்த மாதிரி விழா எடுப்பாங்க. இப்ப மூனு ஷோ ஓடுனாலே பெரிய விஷயமா ஆயிருச்சு போல. போற போக்கப்பார்த்தா படம் சூட்டிங் முடிஞ்சாலே சக்ஸஸ் மீட் கொடுத்துடுவாங்க போல. அதனாலே அப்டேட் குமாருக்கும் ஒரு சக்சஸ் மீட் வைக்கலாம்னு இருக்கேன். “இணைய வாசிகளை மிரள வைத்த குமாரு” டைட்டில் நல்லா இருக்கா? நீங்களும் நாலு டைட்டிலை செலக்ட் பண்ணி சொல்லுங்க. முடிவு பண்ணிக்குவோம். நாமளும் காலத்துக்கு ஏத்த மாதிரி அப்டேட் ஆகிடுவோம். என்ன நான் சொல்றது.. இனொரு விஷயம் தெரியுமா, ஆண்டாள் மேட்டர்ல வைரமுத்துவை திட்டி நித்தியானந்தா சிஷ்யைகள் பேசுன வீடியோதான் டைம் லைன் ஃபுல்லா இருக்குது. ஆன்மீக அரசியல்ல ரஜிக்கு டஃப் கொடுக்குறது கமல் இல்ல. நித்யானந்தா தான்னு பேசிக்குறாங்க.. உண்மையா?
@Kadharb32402180
வீட்டைக் குளிர்விக்க 30,000 ரூபாய்க்கு ஏசி வாங்கும் நாம்
பூமியைக் குளிர்விக்க 30 ரூபாய்க்கு மரக்கன்றுகள் வாங்கி நடுவதில்லை
@prema_sweety
ஆசிரியர் : ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன் : ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்
@SKtwtz
நடிகர் கமல் நள்ளிரவில் திடீர் அறிவிப்பு ஏன்?: தமிழிசை
உங்க தலைவர்கூடதான் 1000,500ரூ செல்லாதுன்னு இரவு சொன்னார்..
@amuduarattai
இப்போது, பைக்கில் லிப்ட் கேட்டால் கூட,யாரும் தருவதில்லை. முன்பு யாரையும்,சைக்கிளில் ட்ரிபிள்ஸ் ஏற்றிச் செல்லும் அளவிற்கு மனிதாபிமானம் இருந்தது.
@senthilcp
குருவே!உங்க செல்போன் ரிங்க்,டோன் எது?
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே"குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் மலர் செண்டாட்டம்
@வாசுகி பாஸ்கர்
கருவாட்டு குழம்பை சாப்பிட்ட பின் சோப் போட்டு கை கழுவுவது பாசிசத்தில் சேரும்
@mufthimohamed1
ஆடி கார் வாங்கி ஆடம்பரமா வாழனும்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது, சின்னதா ஒரு ஆசிரமம் நடத்தி,சிக்கனமா வாழ்ந்து சிகரம் தொடனும் இதான் என் ஆசை.
@Kozhiyaar
"இன்னைக்கு மதிய சாப்பாட்டுக்கு என்னம்மா அனுப்பி வச்ச!?"
"வெஜிடபிள் பிரியாணி, ஏன் கேட்குறீங்க!?"
"வெஜிடபிள் இருக்கு, பிரியாணி எங்கம்மா!?"
டொக்!!!
@latha_Bharathy
ஒருமுறை கண்ட ஏமாற்றத்தை வைத்தே தேடி வரும் நல்ல வாய்ப்புகளையும், நல்ல மனிதர்களையும் சந்தேகத்தோடே பார்கிறது மனது
@urs_venbaa
புதிய எண்ணிலிருந்து அழைத்து வந்தவுடன் "ஹலோ" சொல்லும்வரை அமைதிகாக்க வேண்டியுள்ளது
@kumarfaculty
மின்சாரம் போய் வந்ததும் குழந்தைகள் படும் சந்தோசத்தோடு ஒப்பிடும் போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் கூட அவ்வளவு சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்...!!!
@Rathikagenius
நேர்மையாக இருப்பதை விட கடினமாக இருக்கிறது நேர்மையாக இருப்பது போல் நடிப்பது
@Chellakutty_Dee
போராட்டத்தை கலைக்க ஒரு கூட மீனை கொட்டிவிட்டு போனா போதும்
@வாசுகி பாஸ்கர்
கொள்கை பிடிப்புள்ள புரட்சியாளர்களை வரிசை படுத்தினால் அதில் எம்ஜிஆரை இரண்டடி முன்னால் நிறுத்துவேன் - தோழர் மாவா
எம்ஜிஆர் பர்த்டே மெசஜ்
@Rathikagenius
இணையத்தில் வார்த்தையைத் தொலைப்பவர்களை விட வாழ்க்கையை தொலைப்பவர்கள் அதிகம்.
@chithradevi_91
கடன் கொடுத்தவர்கள் செல்போனில் உங்களை அழைக்கும் போது தொலைதொடர்புக்கு வெளியே உங்களை வைப்பதெல்லாம் கடவுள் உங்களுக்கு வழங்கும் சிறப்பு சலுகை
@Tamil_Zhinii
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு கூட்டம் சேருதோ இல்லையோ
நித்தியானந்தா ஆன்மீக ஆசிரமத்துக்கு கூட்டம் சேர போவுது...
@samester_twitz
இந்த காலத்து கொசுங்க எல்லாம் ஏதோ சத்து டானிக் சாப்பிட்டு தான் நம்ப மேல உக்காரும் போல ...
கடிக்குதானே தெரிய மாட்டேங்குது ...
ஆனா வந்து போன கொஞ்ச நேரத்துல ஐ பட விக்ரம் போல திண்டு திண்டா வீங்கிப்போவுது
@பரிசல் சிவ. செந்தில்நாதன்
அரசியல் பிரச்சினை வரும்போதெல்லாம் கலைஞராக இருந்தால் என்று எண்ணம் வருகிறது...
@Lakshmi Manivannan
எழுதுகிறவனெல்லாம் எழுத்தாளனென்றால் போலீஸ் ஸ்டேசன் ஏட்டு தான் மிகப் பெரிய எழுத்தாளர்
-லாக் ஆஃப்