மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ஹயீஸ் மீது குற்றப் பத்திரிகை!

ஹயீஸ் மீது குற்றப் பத்திரிகை!

காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களை நடத்திவருவதாகவும், அதற்கு நிதி உதவி செய்வதாகவும் லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹயீஸ் சயீது உள்ளிட்ட 12 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) குற்றப் பத்திரிகையை இன்று (ஜனவரி 18) தாக்கல் செய்துள்ளது.

டெல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 1.279 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ள என்.ஐ.ஏ., லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹயீஸ் சயீது, ஹிஸ்புல் முஜாகிதின் தலைவர் சலாவுதீன் ஆகியோர் காஷ்மீர் பள்ளத் தாக்கில் நடைபெறும் பயங்கரவாதச் செயல்களோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டவர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது காஷ்மீரில் பிரிவினைவாதச் செயல்களில் ஈடுபடுவது, அதற்கான நிதி உதவி செய்வது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஹபீஸ் சயீத், சலாவுதீன் ஆகியோர் தவிர மீதி பத்து பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் நீதிமன்றக் காவல் இன்றோடு முடிவடையும் நிலையில் இன்று குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது என்.ஐ.ஏ.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது அறுபது இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு 950 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன என்றும், இந்த வழக்கில் 300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது என்.ஐ.ஏ. முன்னாள் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தீவிரவாதியான பிட்டா கராத்தே, பத்திரிகை புகைப்படக் காரர் கம்ரன் யூசுப் உள்ளிட்டோர் இந்த குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

“சயீத், சலாவுதீன் இருவரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதச் செயல்களுக்கு தொடர்ந்து உதவி செய்து இந்தியாவுக்கு இடையூறு விளைவிக்கிறார்கள். மேலும் அவர்கள் வங்கிகள் அல்லாத வழிமுறைகளில் காஷ்மீருக்குள் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை செய்து வருகிறார்கள்’’ என்று குற்றம் சாட்டியிருக்கும் என்.ஐ.ஏ., பாகிஸ்தானில் இருந்து வரும் இந்த நிதி உதவி தொடர்பாக நான்கு பேர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 18 ஜன 2018