மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ஜானகி கேரக்டரில் ரித்விகா

ஜானகி கேரக்டரில் ரித்விகா

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் படத்தில் ஜானகி கதாபாத்திரத்தில் நடிக்க ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார்.

அரசியல், சினிமா என இரு துறைகளிலும் முன்னணியில் விளங்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ஏ.பாலகிருஷ்ணன் திரைப்படமாக இயக்கவுள்ளார். இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக நடிக்க ரித்விகா ஒப்பந்தமாகியுள்ளார். சதீஷ் குமார் எம்.ஜி.ஆராக நடிக்கிறார். எஸ்.எஸ் ஸ்டேன்லி அண்ணாதுரையாக நடிக்கிறார்.

படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய ரித்விகா, “ஜானகியின் கதாபாத்திரத்தை நான் ஏற்று நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு. படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கிவிட்டேன். ஜானகி எம்.ஜி.ஆரை மணம் முடிக்கும் முன்னர் சில படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் மருதநாட்டு இளவரசி படம் பார்த்து சில குறிப்புகள் எடுத்தேன். இந்த படம் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வை மட்டும் பேசாமல் தனிப்பட்ட வாழ்க்கையையும் சேர்த்து பேசும்” என கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018