மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை!

மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை!

ஓகி புயலில் காணாமல் போனவர்களை தேடும்பணி கடந்த 27 ஆம் தேதி அன்றே நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறையில் தொழில் வளர்ச்சி குறித்தான கருத்தரங்கம் இன்று(ஜனவரி 18) சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து உள்நாட்டிலேயே தயார் செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்களை தனியார் மூலம் தயாரிப்பதால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் , "ஓகி புயலில் காணமால் போன மீனவர்களை தேடும் பணி கடந்த டிசம்பர் 27ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது, மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை, கடைசி மீனவனை மீட்கும் வரையில் தேடப்படும் என்று கூறியிருந்தோம். இருப்பினும், கடந்த 27 ஆம் தேதிக்கு முந்தைய ஒரு வாரம் வரையிலும் மீனவர்களை கண்டுபிடிக்க முடியாததால் தேடுதலை நிறுத்தி விட்டோம்" என்று கூறினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018