மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சசிகலாவுக்குதான் எல்லாம் தெரியும்!

சசிகலாவுக்குதான் எல்லாம் தெரியும்!

ஜெயலலிதாவோடு 24மணி நேரமும் உடனிருந்தவர் சசிகலாதான், எனவே அவருக்குத்தான் அனைத்து உண்மைகளும் தெரியும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்ட சந்தேகத்தையடுத்து, விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்று மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், டிசம்பர் 4ஆம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று பேசினார். ஆனால் இதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே மறுப்பு தெரிவித்த திவாகரன், ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டு கிளினிக்கல் மரணம் அடைந்ததாகவும், டிசம்பர் 5ஆம் தேதி மாலை ஏற்பட்டதே பயோலஜிக்கல் மரணம்" என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று (ஜனவரி 18) நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

"திவாகரன் பகலில் ஒரு கருத்தைச் சொல்கிறார். இரவில் ஓன்று சொல்கிறார். ஆனால் 24 மணி நேரமும் ஜெயலலிதாவோடு உடன் இருந்தவர் சசிகலா மட்டும்தான். டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்துவிட்டார் என்று செய்தி வரும் வரை அவர்தானே உடனிருந்தார். அவருக்குத்தான் ஜெயலலிதாவின் மரணத்தில் அனைத்து உண்மைகளும் தெரியும். இதுகுறித்து அவர் தான் பதில் கூறமுடியும்" என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018