மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

3 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு!

3 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று(ஜனவரி 18 ) அறிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பதவியேற்ற மேகாலயா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2013ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி பதவியேற்ற நாகாலாந்து சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் 13ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2013ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி பதவியேற்ற திரிபுரா மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மார்ச் 14ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சுமார் 60 இடங்களைக் கொண்ட மூன்று மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைவதால், அதற்கு முன் தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஏ.கே. ஜோதி இன்று மதியம் 12 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் பிப்ரவரி 27ம் தேதியும் திரிபுராவில் பிப்ரவரி 18ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். 3 மாநில வாக்குப் பதிவுகளும் மார்ச் 3ஆம் தேதி எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலங்களில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018