மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம்!

பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம்!

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆல்-ரவுண்டராகத் திகழ்ந்த முன்னாள் வீரர் கபில் தேவ் 15 வருடங்கள் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குப் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இந்திய அணிக்கு உலகக்கோப்பையைக் கைப்பற்றி தந்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

சிறந்த ஆல்ரவுண்டரான அவரை, இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டுப் பேசிவருகின்றனர். கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியிலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற தொடரிலும் அதிரடியாக விளையாடிய பாண்டியாவை இந்திய அணியின் தற்போதைய கபில் தேவ் எனக் கூறிவருகின்றனர்.

இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது பாண்டியா தன் விக்கெட்டினை மோசமான முறையில் இழந்தார். முதல் இன்னிங்ஸில் கவனம் இன்றி ரன் ஓடியும், இரண்டாவது இன்னிங்ஸில் பவுன்சர் பந்தினை அடிக்க முயற்சி செய்தும் தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். இதனை கண்ட முன்னாள் வீரர் கபில் தேவ் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் “இவ்வாறு மோசமாக ஆட்டமிழக்கும் ஒரு வீரரை என்னுடன் ஒப்பிட்டு கூறாதீர்கள். அவர் திறமையான வீரர்தான் ஆனால் அவர் இன்னும் மன ரீதியாகத் தயாராகவில்லை” என்றார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 18 ஜன 2018