மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சேவை விவரங்களை வெளியிடும் டிராய்!

சேவை விவரங்களை வெளியிடும் டிராய்!

இந்தியாவின் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் சேவைத் தரம் உள்ளிட்ட விவரங்கள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைத் தரம், கட்டணம், வாடிக்கையாளர்களின் புகார்கள் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. அவற்றுக்குத் தீர்வு காணுவதிலும் டிராய் மும்முரமாக உள்ளது. இந்நிலையில் தொலைத் தொடர்புத் துறையால் உருவாக்கப்படும் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை அமலாவதற்கு முன்பாக நெட்வொர்க் நிறுவனங்களின் சேவை விவரங்களை ஜனவரி மாத இறுதிக்குள் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், சேவைக் கட்டணங்கள் பற்றிய தனது ஆலோசனை மற்றும் நிலைப்பாடு குறித்த விவரங்களை இன்னும் ஒரு வாரத்தில் டிராய் வெளியிடவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாகும் தொலைத் தொடர்புக் கொள்கை குறித்துப் பங்குதாரர்களுடன் டிராய் பல்வேறுகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் பெங்களூருவில் அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு நெட்வொர்க் சந்தையில் நீடித்து வரும் கடுமையான போட்டியால் கட்டணக் குறைப்பு அதிகமாக நடந்து வருகிறது. மேலும், சேவையில் தரக் குறைவு காரணமாக அழைப்பு துண்டிப்புப் பிரச்னைகளும் அதிகமாக எழுந்து வருகின்றன. இவற்றுக்கான தீர்வு காணுவதாகவும் புதிதாக உருவாகும் தொலைத் தொடர்புக் கொள்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018