மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

மீண்டும் பேச்சுவார்த்தை!

மீண்டும் பேச்சுவார்த்தை!

உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்த 4 நீதிபதிகள், இன்று (ஜனவரி 18) மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக, கடந்த 12ஆம் தேதி உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் மற்றும் மதன் பி லோகூர் ஆகிய நால்வரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி தன்னிச்சையாகச் செயல்படுவதாக, அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து இவர்களுக்கிடையே உள்ள பிரச்சனையை சரிசெய்ய பார் கவுன்சில் சார்பில் 7பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆரம்பமான நிலையில், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் தங்களது அன்றாட அலுவலை கவனிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து பிரச்சனை தீர்ந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் வெளியிடப்பட்ட தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நான்கு அதிருப்தி நீதிபதிகளில் ஒருவரது பெயர் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த பிரச்சனை நீடித்துவருவதாக தகவல் வெளியானது. அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இதையடுத்து கடந்த 16ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நான்கு நீதிபதிகளையும் தன்னுடைய அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டாவது சந்திப்புக்கு நேற்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிபதி செலமேஸ்வர் நீதிமன்றத்துக்கு வராத காரணத்தால் சந்திப்பு நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று ( ஜனவரி 18) மீண்டும் உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, புகார் கூறிய நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில், நீதிபதிகள் ஏகே சிக்ரி, என்வி ரமணா, டிஒய் சந்திரசூட் மற்றும் யுயு லலித் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018