நான்கு நிறுவனங்களாகப் பிரியும் ஏர் இந்தியா!


கடனில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியாவை நான்கு நிறுவனங்களாகப் பிரித்து அதன் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொதுத் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ளதால் இந்நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஏர் இந்தியாவைக் கைப்பற்றும் முயற்சியில் தனியார் நிறுவனங்களின் போட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடன் சுமையிலிருந்து மீள ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏர் இந்தியாவில் அந்நிய நிறுவனங்கள் 100 சதவிகிதம் முதலீடு செய்யவும் மத்திய அமைச்சரவை சமீபத்தில் அனுமதி வழங்கியது.