மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

மாணவர் மரணம்: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

மாணவர் மரணம்: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

பெரம்பூர் தனியார் பள்ளி மாணவர் இறந்ததையடுத்து அவரது இறப்புக்கு நீதி கேட்டு போராட்டம் வலுத்து வரும் நிலையில் மாணவனுக்குத் தண்டனை வழங்கிய உடற் கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, திரு.வி.க.நகர் 17ஆவது தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவரது மகன் நரேந்தர்(15). பெரம்பூரில் உள்ள தனியார் டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலை தனது மகனை முரளி பள்ளியில் விட்டுச் சென்றுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பள்ளியில் இருந்து மாணவனின் தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. நரேந்தர் மயங்கி விழுந்ததாகவும், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது நரேந்தர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முரளி திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்’ பள்ளிக்குத் தாமதமாக வந்ததால் உடற் கல்வி ஆசிரியர் ஜெயசிங் விளையாட்டு மைதானத்தில் டக்வாக் செய்யச் சொல்லி தண்டனை வழங்கியுள்ளார். இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட நரேந்தர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் “என்று புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி திரு.வி.க. நகர் காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து மாணவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் மாணவனின் இறப்புக்கு நீதி கேட்டும் மாணவனின் பெற்றோர் உறவினர்களும், சக மாணவர்களின் பெற்றோர்களும் ஒன்று திரண்டு பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறு சிறு விஷயங்களுக்காக மாணவர்களை மன, உடல் அளவில் துன்புறுத்தும் இதுபோன்ற பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நரேந்தர் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும்.தண்டனை வழங்கிய உடற் கல்வி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்குப் பதற்றம் நிலவி வருகிறது. பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018