பாலிவுட் சென்ற ரகுல்


அஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிப்படங்கள் கொடுத்துவரும் ரகுல், தமிழ் திரையுலகில் இன்னும் வலுவான வெற்றியை பதிவு செய்யவில்லை. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஸ்பைடர் திரைப்படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
ஆனால் கார்த்தி ஜோடியாக ரகுல் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். அந்த படத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளார்.