மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

முதலீடுகளை ஈர்த்த சர்வதேசத் தொழில் மாநாடு!

முதலீடுகளை ஈர்த்த சர்வதேசத் தொழில் மாநாடு!

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சர்வதேசத் தொழில் மாநாட்டில் ரூ.2.19 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஒப்பந்தங்கள் வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

’மேற்கு வங்க சர்வதேசத் தொழில் மாநாடு’ இரண்டு நாள் நிகழ்ச்சியாக கொல்கத்தா நகரில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “இதுவரையில் சுமார் ரூ.2.19 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் வந்துள்ளன. இந்த அளவு இன்னும் உயரும். இந்த முதலீடுகள் வாயிலாக நம் மாநிலத்தில் சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த இரண்டு நாள் மாநாட்டில் 110 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நமது மாநிலம் சுற்றுச்சூழல் நட்புடனும், அரசியல் நிலைத்தன்மையுடனும் இருப்பதாலேயே இவ்வளவு முதலீடுகள் குவிந்துள்ளன” என்று கூறி, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018