மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

பன்னீர்செல்வம் கல்வெட்டு உடைப்பு!

பன்னீர்செல்வம் கல்வெட்டு உடைப்பு!

இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் அடையாளமாக மதுரை தோப்பூரில் அமைக்கப்பட்ட அதிமுக 100 அடி உயர கொடிகம்பத்திலிருந்து பன்னீர்செல்வம் பெயர் பொறித்த கல்வெட்டு உடைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றை எடப்பாடி - பன்னீர் தரப்புக்கு ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், சின்னம் கிடைத்தபின் முதன்முறையாக மதுரையில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா கடந்த நவம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட்டது. சின்னம் கிடைத்ததற்காக 100 அடி உயரத்தில் நடப்பட்ட கொடிக்கம்பத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. நிகழ்வில் கலந்துகொள்ள பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், ஆஸ்பயர் சுவாமிநாதன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.

மேலும் கல்வெட்டில் பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெறாததும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்வெட்டில் பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாத புகைப்படத்தை பன்னீர் ஆதரவாளர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே பன்னீர்செல்வம் பெயர் பொறித்த கல்வெட்டு கொடி கம்பத்தின் பக்கவாட்டில் இடம்பெற்றது. மேலும் இதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கமும் தெரிவித்திருந்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018