மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

மாநில பாடத்திட்டத்தை பரிசீலித்து நீட் வினாத்தாள்!

மாநில பாடத்திட்டத்தை பரிசீலித்து நீட் வினாத்தாள்!

மாநில அரசு பாடத்திட்டத்தை பரிசீலித்து நீட் வினாத்தாளைத் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017 மே மாதம் 7 ஆம் தேதி நாடு முழுவதும் 103 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 11.35 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 88,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சிபிஎஸ்இ தரத்தில் கேள்வித்தாள் இடம் பெறுவதால் மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநில பாடத்திட்டத்தில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் திணறினர். குறிப்பாகத் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகத் தெரிவித்தனர். தற்போது வரை நீட் தேர்வுக்கான கேள்விகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன.

மாநில பாடத்திட்டங்களையும் நீட் கேள்வித்தாளில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், நீட் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டது என்றும், பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வினாத்தாள் மிகக் கடினமாக இருந்தது எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2017 டிசம்பர் 11ஆம் தேதி, இந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் மோகன் சாந்தநாகுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது, ஆஜரான சிபிஎஸ்இ, அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின் போது, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்றும், அனைத்து வினாத்தாள்களும் ஆங்கிலம், இந்தி மற்றும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள், “ சிபிஎஸ்இ-யின் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. நீட் தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் நீட் தேர்வுக்கு கேள்வித்தாளைத் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக மனித வள அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜனவரி 17) நடைபெற்றது. நீட் வினாத்தாள் பிரச்சினைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் ஆலோசனை செய்தனர்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018