அப்பல்லோவுக்கு அம்ருதா நோட்டீஸ்!


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தன்னை கூறிவரும் அம்ருதா, அப்பல்லோ மருத்துவமனைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் தன்னை ஜெயலலிதாவின் மகள் என கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், அதனை உறுதி செய்ய டி.என்.ஏ. பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தமிழக அரசு ஜனவரி 25-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.