மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

தமிழ் இருக்கைக்கு ரூ.3 கோடி வசூல்!

தமிழ் இருக்கைக்கு ரூ.3 கோடி வசூல்!

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலகத் தமிழர்கள் சார்பில் மொய் விருந்து மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.3கோடி வசூல் செய்யப்பட்டது.

உலகின் பல்வேறு பழமையான மொழிகளுக்கு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனித் துறை உள்ளது. ஆனால் தமிழ் மொழிக்கென்று இதுவரை தனித்துறை இல்லை. தமிழுக்கு தனித் துறை அமைக்க கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ் அறிஞர்களால் கோரிக்கை வைத்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தமிழ் கிராமங்களில் விருந்து நிகழ்ச்சியின் போது மொய் வசூலிக்கும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் தற்போது இதே பாணியில் அமெரிக்க வாழ் தமிழர்கள், மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்து ரூ. 3 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த பொறியாளர் பிரவீனா என்பவர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில், ரூ.21 கோடி வரை உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளும், அமெரிக்க வாழ் தமிழ் மக்களும் நிதியாக தந்து உதவினர். இதுவரை, 36 நாடுகளிலிருந்து தமிழ் இருக்கைக்காக 5,000 பேர் பங்கெடுத்து உதவியுள்ளனர். தமிழக அரசு சார்பாக ரூ.10 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையிலிருந்து ரூ.10 லட்சம் சேர்ந்துள்ளது. இதுவரை ரூ.38 கோடி சேர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழ்த்துறை அமைக்கத் தேவையான முழுத் தொகையையும் வரும் 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக தமிழ் இருக்கை அமைப்பின் தலைவரான ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018