மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சண்டக்கோழி 2: இரண்டாம் ஆட்டம்!

சண்டக்கோழி 2: இரண்டாம் ஆட்டம்!

விஷால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சண்டக்கோழி2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

விஷால்-லிங்குசாமி கூட்டணியில் 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்டக்கோழி’. தற்போது அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் சண்டக்கோழி 2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். வரலட்சுமி, ஹரீஷ் பெராடி ஆகியோர் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கின்றனர்.

விஷாலின் 25ஆவது படமாக உருவாகிவரும் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் துவங்க இருப்பதாகவும் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018