மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தாமதம்!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தாமதம்!

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்களைப் பரிந்துரை செய்தும், இதுவரை அது பற்றி முடிவெடுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று (ஜனவரி 18) டெல்லி விக்யான் பவனில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில், தமிழகத்தின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், ”தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய 5 இடங்களை மாநில அரசு பரிந்துரை செய்தது. அதில் ஒரு இடத்தைக் கூட, மத்திய அரசு இறுதி செய்யவில்லை. பலமுறை நினைவுபடுத்தியும், இந்த தாமதம் தொடர்கிறது. இதில், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ஓகி புயல் பாதிப்பு மறுசீரமைப்புப் பணிகள் தொடர்பாகவும் பேசினார். “ஓகி புயல் நிவாரண நிதியாக, தமிழக அரசின் சார்பில் 5,255 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசின் சார்பில் 401 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதித்தொகையையும் மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார். சென்னையில் வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 4,047 கோடி ரூபாய் தேவை என்றும், இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதற்கான தொகை ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு ஏற்ற இடங்களாக தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களை தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. இதுகுறித்து, மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆய்வு செய்தது; இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கட்சிகள் இதுதொடர்பாக கருத்து வெளியிட்டு வந்தன. இந்த நிலையில், உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில் அமைக்க வேண்டுமென நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018