மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ரயில் மறியல்: பட்டாசுத் தொழிலாளர்கள் கைது!

ரயில் மறியல்: பட்டாசுத் தொழிலாளர்கள் கைது!

சுற்றுப்புறச் சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு தரக்கோரி பட்டாசுத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 24ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று அவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெறக் கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கைக் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசும், பட்டாசு உற்பத்தியாளர்களும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று (ஜனவரி 17) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுச்சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுவதில்லை. நீதிமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு தயாரிக்கப்படுகிறது. பட்டாசு தொழிலேயே நம்பியிருக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018