மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

உயர்வை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!

உயர்வை நோக்கி இந்தியப் பொருளாதாரம்!

இன்னும் 8 முதல் 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.) சார்பாகத் தலைநகர் டெல்லியில் ஜனவரி 17ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய சுரேஷ் பிரபு, ”அடுத்த 8 முதல் 9 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலராக உயரும். அதில் உற்பத்தித் துறையின் பங்கு மட்டும் 20 சதவிகிதமாக (1 லட்சம் கோடி டாலராக) இருக்கும். எனவே உற்பத்தித் துறை வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உற்பத்தித் துறை முழுவதுமாக டிஜிட்டல்மயமாகும் பட்சத்தில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகள் கிட்டும். எனவே அனைத்துத் துறைகளிலும் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும் பணியில் சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018