மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ஜிஎஸ்டி: பயோ டீசல் வரி குறைக்கப்படுமா?

ஜிஎஸ்டி: பயோ டீசல் வரி குறைக்கப்படுமா?

2018 பட்ஜெட் தக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பயோ டீசல் வரியைத் தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று அத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுத்தமான ஆற்றல் பயன்பாட்டை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் பயோ டீசல் துறை தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட போது பயோ டீசலுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அதற்கு முன்னர் பயோ டீசலுக்கு 6 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. இதனால் பயோ டீசல் பயன்பாடு குறையத் தொடங்கியது. வரி உயர்த்தப்பட்டதால் அதிவேக டீசலை விட பயோ டீசலின் விலை உயரத் தொடங்கியது. எனவே பயோ டீசலுக்கான வரியை தற்போதுள்ள 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று ’இந்திய பயோ டீசல் கூட்டமைப்பு’ சார்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநில நிதியமைச்சர்களுக்கும் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தாவர எண்ணெய்களிலிருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் இந்த பயோ டீசல் நுகர்வில் சர்வதேச அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாட்டை 30 முதல் 100 சதவிகிதம் வரையில் குறைக்க முடியும். 18 சதவிகித வரி விதிக்கப்படுவதால் பயோ டீசலின் விலை லிட்டருக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது சாதாரண டீசல் விலையுடன் ஒன்றுவதால் பயோ டீசலின் பயன்பாடு குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 12 லட்சம் டன் அளவிலான பயோ டீசலை உற்பத்தி செய்யும் திறனை இந்தியா கொண்டுள்ளது. இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 1,25,000 பேர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர். எனவே பயோ டீசல் வரி உயர்த்தப்பட்டதால் இத்துறையினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். 2018 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக பயோ டீசலுக்கான வரி குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இத்துறையினர் காத்துக் கிடக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018