மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

திருவெம்பாவை இயற்றியது ஆண்டாளா?

திருவெம்பாவை இயற்றியது ஆண்டாளா?

வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேற்று (ஜனவரி 17) வெளியிடப்பட்டிருக்கும் படைப்பாளிகளின் கூட்டறிக்கை ‘திருவெம்பாவை எழுதியது ஆண்டாளா?’ என்ற கேள்வியையும் இலக்கிய உலகத்தில் எழுப்பியிருக்கிறது.

‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சில் ஆண்டாளை தேவதாசி என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக 36 படைப்பாளிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், மாலன், சா.கந்தசாமி, ச.தமிழ்செல்வன் உள்ளிட்ட 36 படைப்பாளிகள் ஒன்றணைந்து வைரமுத்துவுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலும் மிரட்டலும் நிறுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வாயிலாகக் கூறியுள்ளனர். அதோடு, ‘வைரமுத்துவை எதிர்ப்பவர்கள் இலக்கிய பரிச்சயம் இல்லாதவர்கள்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அதே அறிக்கையில், “ஆண்டாள் 1200 ஆண்டுகளுக்கு முன்பு திருவெம்பாவை, திருப்பாவை பாடியவர்” என்று கூறியிருக்கிறார்கள்.

“சா.கந்தசாமி, பிரபஞ்சன் ஆகியோர் முதல் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில்தான் ஆண்டாள் திருவெம்பாவை எழுதியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திருவெம்பாவை என்பது திருவாசகம் என்ற சைவ பக்தி இலக்கியத்தில் ஓர் அங்கமாக இருப்பது. இதை இயற்றியவர் மாணிக்கவாசகர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் அதற்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்தவர் என்றும் கருதப்படுகிறவர்.

திருப்பாவை என்பது ஆண்டாள் இயற்றிய வைணவ பக்தி இலக்கியம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டாள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆண்டாள் திருவெம்பாவை, திருப்பாவை பாடினார் என்று பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிட்டுவிட்டு... அதே அறிக்கையிலே இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள்தான் வைரமுத்துவை எதிர்க்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருப்பது கேலிக்குரியது. இதை வைரமுத்துவேகூட ஏற்கமாட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018