மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ஹெல்த் ஹேமா: வாங்கிவிட்டீர்களா வெந்தயக்கீரையை?

ஹெல்த் ஹேமா: வாங்கிவிட்டீர்களா வெந்தயக்கீரையை?

நேற்று வெந்தயக்கீரையில் என்னென்ன சத்துகள் அடங்கியுள்ளன என்பதைப் பார்த்தோம். இன்று எதனுடன், எப்படி சாப்பிட்டால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

வெந்தயக்கீரையை வேகவைத்து, அதனுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு கலந்து அல்வா போல செய்து சாப்பிட்டால், மாரடைப்பு, கண்பார்வை குறைவு, வாதம், சொறி சிரங்கு, ரத்தச் சோகை ஆகிய பிரச்னைகள் குணமாகும்.

வெந்தயக்கீரையைக் காலை வேளையில் கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால், வாய்வு தொல்லைகள் நீங்கி, செரிமானம் மற்றும் வயிற்று உப்புசம் போன்ற ரச்னைகள் ஏற்படாது

வெந்தயக்கீரையில் அல்வா தயாரித்து அதை காலை மற்றும் மாலை வேளைகளில் சிறிதளவு சாப்பிட்டுவந்தால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, சீதபேதி பிரச்னைகள் குணமாகும்.

உணவில் வெந்தயக்கீரையை சேர்த்துக்கொண்டால், அது வயிற்றுப்போக்கை நிறுத்த உதவுவதுடன், மாதவிடாய் கோளாறுகளைப் போக்கி, உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்து உடலின் வலிமையை அதிகரிக்கும்.

வெந்தயக்கீரையைத் தண்ணீர்விட்டு வதக்கி, காலை மற்றும் மாலை வேளைகளில், அரை டம்ளர் குடித்துவந்தால், நெஞ்சுவலி குணமாகும்.

வெந்தயக்கீரையுடன் சீமை அத்திப்பழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பப்போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலை வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீரிழிவு நோய் சிறிது சிறிதாகக் குறையும்.

வெந்தயக்கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள்மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.

இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாள்களுக்குச் சாப்பிட்டுவந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக்கீரையைத் தொடர்ந்து நக்குவது நல்லது. வெந்தயக்கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளைச் சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018