மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

தகுதிநீக்க வழக்குகள்: பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

தகுதிநீக்க வழக்குகள்: பிப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு வரும் பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அணிகள் இணைந்த அடுத்த நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனால் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் 18 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குடன் சட்டப்பேரவையில் குட்கா விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிரான வழக்கு, பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு உள்பட ஏழு வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 17) நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சக்கரபாணி சார்பில் கபில் சிபல் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், “அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்த உடனேயே, ஆகஸ்ட் 24ஆம் தேதியே அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பிறகு தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், மார்ச் 20ஆம் தேதி பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து ஒன்பது மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை” என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து வாதத்தை முன்வைத்த பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “யாரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பேரவைத் தலைவருக்கு உள்ளது. பேரவைத் தலைவரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018