ஜெ. இல்லத்தில் மீண்டும் ஆய்வு!


ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நேற்று (ஜனவரி 17) மீண்டும் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், அவரது இல்லத்தை அரசுடமையாக்குவதற்காகவே ஆய்வு நடத்தப்பட்டதாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவர் வசித்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பினரும் கோரி வந்தனர். இதையடுத்து, வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, கடந்த டிசம்பர் 30ஆம் தேதி ஆட்சியர் அன்புசெல்வன் தலைமையில் வட்டாட்சியர், வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் வேதா இல்லத்தல் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 17) மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வின்போது இருந்தனர்.