மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

ராமதாஸுடன் துறவிகள் சங்கத்தினர் சந்திப்பு!

ராமதாஸுடன் துறவிகள் சங்கத்தினர் சந்திப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸை, மருதாசல அடிகளார் தலைமையிலான அகில பாரதிய துறவியர்கள் சங்கத்தினர் நேற்று சந்தித்துப் பேசினர்.

கடந்த 7ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதற்கு வைரமுத்து விளக்கம் தந்துவிட்டார்.

இதுகுறித்து வைரமுத்துவைக் கண்டிக்கும்விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘காலத்தால் அழிக்க முடியாத இலக்கியம் படைத்த ஆண்டாள் தமிழர்களின் அடையாளம் ஆவார். இது ஒருபுறமிருக்க சமூகப் பொறுப்புள்ளவர்கள் மக்களின் உணர்வோடு விளையாடும் கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். கருத்துரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது என்றாலும்கூட, அது மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் இருக்க வேண்டும். தமிழகம் நல்லிணக்கத்தின் பூமி. அது காப்பாற்றப்பட வேண்டும். எனவே, எந்தவொரு மதம், எந்தவொரு சமுதாயம், எந்தவொரு நம்பிக்கை குறித்தும் வெறுப்பு கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்த்து, தமிழகத்தில் அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை தழைத்தோங்க பங்களிக்க வேண்டும்’ என அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து நேற்று (ஜனவரி 17) ராமதாஸை விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்த கோவை பேரூரில் உள்ள மருதாசல அடிகளார் தலைமையிலான அகில பாரதிய துறவியர்கள் சங்கத்தினர் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

இதற்குமுன் காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்தில் இராமனுஜர் ஓவியத்தைச் சில சமூக விரோதிகள் தார்ப்பூசி அழித்ததற்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததற்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

வியாழன் 18 ஜன 2018