மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

‘பத்மாவத்’ தடை: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

‘பத்மாவத்’ தடை: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

‘பத்மாவத்’ திரைப்படத்துக்குப் பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ள நிலையில் அதை நீக்கக்கோரி, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்று (ஜனவரி 18) நடைபெறுகிறது.

தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள படம் ‘பத்மாவத்’. இந்தப் படத்தில் ராஜஸ்தானில் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினியின் வரலாறு தவறாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்னி சேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு சிக்கல்களைக் சந்தித்த இந்தப் படம், ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்துக்குத் திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி அளித்துள்ள நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநில அரசுகள் படத்தைத் திரையிட தடை விதித்துள்ளன. கோவாவில் காவல் துறை சார்பில் படத்துக்குத் தடை விதிக்க கோரப்பட்டது.

தடையை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜனவரி 17) மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 25ஆம் தேதி படம் வெளியாக உள்ளதால், இதை அவசர வழக்காக விசாரித்து, மாநில அரசுகள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 18 ஜன 2018