மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

கச்சா எண்ணெய் விலை உயர்வு!

கச்சா எண்ணெய் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெயை அதிகளவு விநியோகம் செய்யும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும் (OPEC) கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தொடர்ந்து குறைத்து வருகின்றன. அதே நேரத்தில் டாலரின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருவதால் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை (70 டாலர்) 4,475 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டில்தான் கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு அதிகமாக இருந்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் தற்போது 1 லிட்டர் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்து ரூ.74.02 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.65.42 ஆகவும் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நிலவும் கடும் உறைபனியால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 18 ஜன 2018