மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

சென்னைப் புத்தகக் காட்சிக்கு வருகை தரும் மின்னம்பலம் வாசகர்களை ஊக்கப்படுத்தும்விதமாக ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான நமது மின்னம்பலத்தின் புத்தகங்கள் சென்னைப் புத்தகக் காட்சியின் அரங்கு எண் 379இல் இடம்பெற்றுள்ளன. நாளுக்கு நாள் நமது அரங்கை நாடிவரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரங்குக்கு வருகை தரும் புதிய வாசகர்கள் அடையும் வியப்புக்கு முக்கிய காரணம் எவ்வித கட்டணமுமின்றி செய்திகளையும் கட்டுரைகளையும் படிக்க வழி செய்துகொடுக்கும் மின்னம்பலத்தின் பணியைக் குறித்துதான்.வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்படும் ஸ்மார்ட்போன் பரிசு திட்டத்தில் பங்குபெற வாசகர்கள் மின்னம்பலம் அரங்குக்கு வருகை தருவதே போதுமானது.

ஒவ்வொரு நாளும் நடைபெறும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ஸ்மார்ட்போன் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று (ஜனவரி 17) நடைபெற்ற குலுக்கலில் ராணிப்பேட்டையில் உள்ள பாரதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் பணியாற்றும் நாசர் MI 5A மாடல் ஸ்மார்ட்போனைத் தட்டிச்சென்றார். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் RCR குழும நிறுவனங்களின் தலைவருமான திரு.ராமசாமி அவருக்கு பரிசினை வழங்கி சிறப்பித்தார்.இன்றைய குலுக்கலில் வெல்வது நீங்களாகவும் இருக்கலாம்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 18 ஜன 2018