மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

நேரடி வரி வசூல் ரூ.6.89 லட்சம் கோடி!

நேரடி வரி வசூல் ரூ.6.89 லட்சம் கோடி!

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் நேரடி வரியாக ரூ.6.89 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இது சென்ற நிதியாண்டு வசூலை விட 18.7 சதவிகிதம் அதிகமாகும்.

2017-18 நிதியாண்டில் ரூ.9.8 லட்சம் கோடியை நேரடி வரி வாயிலாக வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜனவரி 15 வரையிலான ஒன்பதரை மாதங்களில் நேரடி வசூல் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.6.89 லட்சம் கோடி கிடைத்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இத்தொகை நடப்பு நிதியாண்டின் வரி வசூல் இலக்கில் 70 சதவிகிதமாகும். இக்காலகட்டத்தில் ரீபண்ட் தொகை வழங்குவதற்கு முன்பான மொத்த வரி வசூல் 13.5 சதவிகித உயர்வுடன் ரூ.8.11 லட்சம் கோடியாக இருந்தது. ரீபண்ட் தொகையாக ரூ.1.22 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 18 ஜன 2018