மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 ஜன 2018

சமத்துவம் பேசுவது திராவிடம்தான்!

சமத்துவம் பேசுவது திராவிடம்தான்!

சமத்துவமும் சகோதரத்துவமும் பேசுவதுதான் திராவிடம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு விழா, பொங்கல் விழா மற்றும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 24ஆம் ஆண்டு விழா ஆகியவை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் கடந்த இரு நாள்களாக நடைபெற்றது.

திராவிடர் கழகம் சார்பாக ஆண்டுதோறும் பல்துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த வருடத்துக்கான பெரியார் விருது, திரைப்பட நடிகர் பார்த்திபன், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், இசைக்கலைஞர் திருபுவனம் ஆத்மநாதன், ஒளிப்பதிவாளர் செழியன், கவிஞர் சல்மா, ஓவியர் அபராஜிதன் ஆகியோருக்கு தி.க தலைவர் கி.வீரமணி அவர்களால் வழங்கப்பட்டது.

விருதாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து பெரியாரின் முழு ஊருவச் சிலையுடன் பெரியார் விருது வழங்கப்பட்டது. மேலும், தமிழறிஞர் மணவை முஸ்தபா மற்றும் நடிகர் மணிவண்ணன் ஆகியோரது படங்களும் திறந்து வைக்கப்பட்டது.

அதைதொடர்ந்து பேசிய திக தலைவர் வீரமணி, “திராவிடம்தான் சமத்துவம் சகோதரத்துவம் பேசுவது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டை கொண்டது. தமிழ்மொழியை செம்மொழியக்கியதும் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக்கியதும் கலைஞரின் சாதனைகளாகும். திராவிடம் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த பருப்பும் வேகாது. இங்கு குழுமியுள்ள கூட்டத்துக்கு நாங்கள் எதைக் கொடுக்கிறோம்? தன்மானம் மற்றும் இனமானத்தைக் கொடுக்கிறோம்” என்றும் “தமிழர்களுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்றும் விளக்கிப் பேசினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 18 ஜன 2018