மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: காய்கறிக் குழம்பு!

பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது தமிழகம். இருந்தாலும், தோழியின் புடவை முந்தானை டிசைன் பற்றியும் ஜிமிக்கி கம்மலைப் பற்றியும், ஆஃபரில் வாங்கிய பொருள்களைப் பற்றியும், அடுத்தவர் வீட்டில் சமையல் எப்படி என்றும் கண்டிப்பாகப் பேசியிருப்போம். அதில் ஒன்று, பலவகை காய்களைச் சேர்த்து செய்த குழம்பு.

“எப்படி கீர்த்தனா உன்னால மட்டும் டேஸ்ட்டா செய்ய முடியுது?” என சிலாகித்த பெண்களுக்கு இதோ செய்முறை விளக்கம்.

தேவையான பொருள்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு (பெரிதாக நறுக்கிய துண்டுகள்) - இரண்டரை கப்

மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்

அவரை, கொத்தவரை, பீன்ஸ் - தலா அரை கப்

துவரம்பருப்பு - அரை கப்

மைசூர்பருப்பு - 6 டீஸ்பூன்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவையான அளவு

நெய் - 4 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

பெருங்காயம் - 1 துண்டு

உளுந்தம்பருப்பு - 2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்

தனியா - 6 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 15

மிளகு - 2 டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

துருவிய தேங்காய் - அரை கப்

தாளிக்க:

கடுகு - 4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

நிலக்கடலை - 4 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை:

துவரம்பருப்பு, மைசூர்பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவையுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முறையே பெருங்காயம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காயைத் தனித்தனியே சேர்த்து சிவக்க வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள்.

புளியுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.

பூசணி, பரங்கி, கத்திரிக்காய், வாழைக்காய் தவிர மற்ற காய்கறித் துண்டுகளை சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து நசுங்கும் பதத்துக்கு வேகவைத்து கொள்ளவும்.

புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து கொதிக்கவிடுங்கள். சற்று புளி வாசனை போனதும் பாதியளவு வெந்த காய்கறிகள், தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க வையுங்கள்.

நன்கு கொதித்து சேர்ந்துவந்ததும், அரைத்த கலவை, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் நெய்யைச் சுடவைத்து கடுகு, நிலக்கடலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணக்கும் காய்கறிக் குழம்பு தயார்.

பொன்னான பொங்கல் திருநாளில் மட்டுமல்லாது எந்த நாளும் நேரம் கிடைக்கும்போது செய்து சுவைத்து மகிழுங்கள்.

கீர்த்தனா சிந்தனைகள்:

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018