மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

காப் பஞ்சாயத்து: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

காப் பஞ்சாயத்து: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

சாதி மாறி திருமணம் செய்பவர்கள்மீது காப் பஞ்சாயத்தினர் போன்றோர் தாக்குதல் நடத்துவது சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து எனப்படும் கட்டப் பஞ்சாயத்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இவை, எந்தப் பிரச்னைக்கும் நீதிமன்றத்தை நாடாமல் தாங்களாகவே விசாரித்துத் தீர்ப்பை வழங்குகின்றன. வடஇந்தியாவில் ஒரு சில காப் பஞ்சாயத்துகள் பெண்கள் செல்போன் வைத்திருக்கக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சாதி மாறி திருமணம் செய்பவர்களை மிரட்டுவது, அவர்கள்மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் இவை ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ‘சக்தி வாகினி’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமானது 2010இல் உச்ச நீதிமன்றத்தில் காப் பஞ்சாயத்துகளுக்கு எதிராகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இத்தகைய கிராமப் பஞ்சாயத்துகளின் வன்முறைகளிலிருந்து பெண்களைக் காக்க, கண்காணிக்க உச்ச நீதிமன்றமே ஏதாவது வழிமுறையைச் சொல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று (ஜனவரி 16) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓர் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வது அவர்களின் விருப்பம் என்றும், சாதிகளை மறந்து காதல் திருமணம் செய்வோரை யாரும் தடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018