மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

பெரிய பாண்டியன் கொலை: நாதுராம் வாக்குமூலம்!

பெரிய பாண்டியன் கொலை: நாதுராம் வாக்குமூலம்!

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனைத் தான் சுடவில்லை என ராஜஸ்தான் போலீசாரிடம் கொள்ளையன் நாதுராம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் தங்கம், வெள்ளி என 3.5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர். கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி நாதுராம் உள்ளிட்ட கொள்ளையர்களை நெருங்கும்போது ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைச் சுட்டது யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் நாதுராமை குஜராத்தில் வைத்து ராஜஸ்தான் போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். நாதுராம் மற்றும் அவரது கூட்டாளியையும் பாலி மாவட்டத்தில் உள்ள ஜேத்தரான் நீதிமன்றத்தில் போலீசார் ஜனவரி 15 ஆம் தேதி ஆஜர்படுத்தினர். நாதுராமை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில் 3 நாட்கள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நாளை 18ஆம் தேதி கொள்ளையர்களை மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மூன்று நாட்களாக நடத்திய விசாரணையில் பெரியபாண்டியன் கொல்லப்பட்டது பற்றியும் நாதுராம் வாய் திறந்துள்ளார்.

அதாவது கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி தானும் தனது நண்பரான தீபாரமும் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததாகவும், தாம் இருந்த வீட்டைச் சென்னை போலீசார், சுற்றி வளைத்த போது அங்கிருந்து தப்பியோடியதாகவும் கூறினார்.

தப்ப முயலும் போது யாரோ துப்பாகியால் சுடும் சத்தத்தை மட்டும் கேட்டதாகவும், ஆய்வாளர் பெரிய பாண்டியனைத் தான் சுடவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலம் வழக்கின் முக்கிய திருப்பமாக இருக்கும் என கருதப்படுகிறது. நாதுராமிடம் மேலும் சில தகவல்களைச் சேகரிக்க ராஜஸ்தான் போலீஸ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018