மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

உணவுப் பொருளுக்குக் கூடுதல் மானியம்!

உணவுப் பொருளுக்குக் கூடுதல் மானியம்!

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் உணவு மானிய மசோதாவுக்காக ரூ.1.60 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. வரும் நிதியாண்டுக்கான (2018-19) உணவு மானியமாக ரூ.1,45,338 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிதியானது கடந்த ஆண்டு செய்யப்பட்ட ஒதுக்கீட்டை விட 10 சதவிகிதம் அதிகமாகும். வரும் நிதியாண்டில் உணவு அமைச்சகத்துக்கென (உணவு மானியம் உட்பட) மொத்தம் ரூ. 2.20 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இது ரூ.1.96 லட்சம் கோடியாகும்.

வரும் நிதியாண்டில் மத்திய உணவு அமைச்சகம் மாவட்ட உணவுப்பொருள் விநியோக மையங்களுக்கு அதிக கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் மக்கள் மானிய விலையில் பொருள்களை வாங்க உபயோகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு அதிகபட்ச மானிய விலையாக ரூ.1 முதல் ரூ.3 வரை 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் தற்போது கோதுமையின் விலை கிலோ ஒன்றுக்கு விலை ரூ.2 ஆகவும், அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆகவும் உள்ளது. இந்த விலைகளில் மாற்றம் இருக்காது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 17 ஜன 2018