மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

கமலுடன் இணைந்த அரசியலா? ரஜினி

கமலுடன் இணைந்த அரசியலா? ரஜினி

புதிய கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் என்றும் அவரின் அரசியல் அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் கூறியிருந்தார்.கட்சி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே செயலி ஒன்றையும் இணையதளப் பக்கத்தையும் அறிமுகப்படுத்தினார்.

இதற்கு முன்னதாகவே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். தனது பிறந்த தினமான நவம்பர் 7 அன்று மையம் விசில் என்ற செயலியை தொடங்கிவைத்து , அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை செய்துவருகிறேன், அதனால் தான் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வரவதற்கு தாமதமாகிறது, ஜனவரிக்கு பிறகு அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் என்றும் கமல் கூறியிருந்தார்.

இதனிடையே, விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய கமல்ஹாசன், "வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்கு பிறகு ஆக்டிவ் அரசியலில் ஈடுபடப்போவதாகவும்,தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கான முறையான அறிவிப்பு வரும் ஜனவரி 18 ஆம் தேதி வெளியாகும்" என்றும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் நேற்று (ஜனவரி 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் , "வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் ராமநாதபுரத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை துவக்க உள்ளதாகவும், அன்று ராமநாதபுரத்திலே தனது கட்சிப்பெயரை அறிவிக்க உள்ளதாகவும்" கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 17) செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "புதிய கட்சி தொடங்கவுள்ள கமலுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும், கமலின் அரசியல் அறிவிப்பை எதிர்பார்க்கவில்லை" என்றும் கூறியுள்ளார்.

அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, "கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் தான் பதில் சொல்லும்" என்றார்.

ஆறுமாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் வரும் பட்சத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு," நிச்சயமாக தேர்தலை சந்திப்பேன்" என்று கூறியுள்ளார்.

எம்ஜிஆருடைய கொள்கைகளை தற்போதுள்ள கட்சிகள் பின்பற்றுகிறார்களா என்ற கேள்விக்கு, "ஓரளவு பின்பற்றுகிறார்கள்" என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018