மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

போராடி வென்ற நடால்

போராடி வென்ற நடால்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராகத் திகழ்ந்து வரும் ரபேல் நடால் இன்று (ஜனவரி 17) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்பேனிஷ் வீரரான ரபேல் நடால், 21 ஆவது இடத்தில் உள்ள லியோநார்டோ மேயர் உடன் மோதினார்.

வழக்கம் போல் நடால் அதிரடியாக விளையாடி முதல் இரண்டு செட்களையும் 6-3,6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் மூன்றாவது செட்டினை அவர் அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியவில்லை. கேம் பாய்ன்ட் வரை சென்ற இந்த செட்டில் இருவரும் நீண்ட நேரம் போராடினர். லியோநார்டோ மேயர் இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாமல் விடவே அதனை 7-6 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்தார் நடால். இரண்டாவது சுற்றில் வெற்றிபெற்ற நடால் நாளை மறுநாள் (ஜனவரி 19) நடைபெறவிருக்கும் 3ஆவது சுற்று போட்டியில் தமீர் டுகூமர் உடன் மோத உள்ளார்.

இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள மரின் சிலிக் ஜோ சோஸாவை எதிர்கொண்டார். அதில் 6-1, 7-5, 6-2 என்ற நேர் செட்க்கணக்கில் வெற்றிபெற்று மூன்றாவது சுற்றிற்கு முன்னேறி உள்ளார். நாளை மறுநாள் நடைபெறவுள்ள 3 ஆவது சுற்று போட்டியில் அமெரிக்க வீரர் ரையன் ஹேரிஷன் உடன் மரின் சிலிக் மோத உள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 17 ஜன 2018