10 ரூபாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி : ஆர்.பி.ஐ!


10 ரூபாய் நாணயங்களில் சில முரண்பாடுகள் இருப்பதால், சமீபகாலமாக அது செல்லாது என்ற தவறான தகவல் பரவி, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இதுவரை வெளியான அனைத்து வடிவமைப்புகளுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரம் உண்டு என்று ரிசர்வ் வங்கி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.