மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

ஜெயக்கொடி மாற்றம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஜெயக்கொடி மாற்றம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியில் இருந்து ஜெயக்கொடி மாற்றப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ஜெயக்கொடி. குட்கா ஊழல் தொடர்பான வழக்கையும் இவர்தான் விசாரித்து வந்தார். குட்கா ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நேர்மையான விசாரணை என நீதிபதியால் பாராட்டப்பட்டவர்.

இந்நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக மோகன் பியார் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்படுவதாகவும் தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. திமுக சட்டப்பிரிவு செயலாளரான ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயக்கொடி மாற்றப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகவும் புதிய ஆணையரான மோகன் பியாரின் நியமனத்தினை ரத்து செய்யுமாறும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 17 ஜன 2018