மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 ஜன 2018

ஹஜ்:மானியம் எனும் மாயை!

ஹஜ்:மானியம் எனும் மாயை!

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதுபற்றி இன்று (ஜனவரி 17) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஹஜ் மானியம் பற்றிய சில புதிய தகவல்களை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

"கப்பலில் சென்ற ஹஜ் பயணிகளை விமானத்தில் அனுப்பி வைத்தது மட்டும் தான் மத்திய அரசு செய்தது,மற்றபடி இஸ்லாமியர்களுக்கு ஹஜ் மானியம் என்ற பெயரில் எந்த உதவியும் அரசு சார்பாக வழங்கப்படவில்லை" என்று இந்த நடவடிக்கை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வைகோ.

மேலும், பு னித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ‘ஹாஜிக்களுக்கு’ மத்திய அரசு எவ்வித மானியமும் அளிப்பது இல்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம்களின் ஹஜ் பயணத்தில் இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கூறப்படுவதிலும் துளி கூட உண்மை இல்லை’’ என்று தெரிவித்திருக்கும் வைகோ இது தொடர்பான விவரங்களையும் தன் அறிக்கையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான் என்பதை மறுக்க முடியாது. ஹஜ் யாத்திரை செல்பவர்களை அரசின் ஹஜ் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஹஜ் பயணிகள் அதற்கான கட்டணமாக ரூ. 1 இலட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டும். சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 34 ஆயிரம் ஹாஜிகளிடம் ஜித்தாவில் இறங்கியவுடன் வழங்கப்படும். இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை ரூ. 1 இலட்சத்து 46 ஆயிரம் ஆகும். இதில் விமானக் கட்டணம், மக்கா, மதினாவில் தங்கும் கட்டணம், ஹஜ் வழிகாட்டி கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து ஹஜ் குழு மூலம் செலவிடப்படும் தொகை ரூ. 1 இலட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு ஹஜ் பயணியும் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகமாகச் செலுத்துகிறார்கள். இதில் எங்கிருந்து மானியம் கிடைக்கிறது என்று தெரியவில்லை.

இந்தத் தகவல்களை சுட்டிக் காட்டிய வைகோ, ‘ பா.ஜ.க. அரசு ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி வரை ஒதுக்குவதாகவும் அது இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும் கூறி இருக்கிறது. அப்சல் அமானுல்லா தலைமையிலான ஹஜ் யாத்திரைக்கான குழு, மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபரில் பரிந்துரை செய்து இருக்கிறது. விமானக் கட்டணத்தைவிட கப்பல் பயணச் செலவு குறைவு என்பதால், கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ஹஜ் யாத்திரைக்குப் புதிய கொள்கையை அக்குழு தனது பரிந்துரையில் அறித்துள்ளது.

ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது. எனவே, இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு ‘மானியம்’ என்பதை மத்திய அரசு கூறாமல் இருப்பதுதான் ஹாஜிகளுக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 17 ஜன 2018