போர் விமானத்தில் நிர்மலா சீதாராமன்


மணிக்கு 2100 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் ‘சுகோய் 30 MKI’ ஜெட் ரக போர் விமானத்தில் இன்று (ஜனவரி 17) மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாதுகாப்பு சோதனை மேற்கொண்டார்.
ராணுவம், விமானப்படை, கடற்படையின் செயல்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் சோதனை நடத்தி வருகிறார். முன்னதாக சில நாட்கள் முன்பு கடற்படையில் ஐஎன்எஸ் விக்ரமாதித்தியா விமான தளத்திலிருந்து MiG-29 ரக போர்க் கப்பலை சோதனை செய்தார். இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து ‘சுகோய் 30 MKI’ போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறன் குறித்த ஆய்வு மேற்கொண்டார்.